SHARE
image_pdfPRINT

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் காணாமல் போனோர் அலுவலகத்தின் மீது எமக்கு நம்பிக்கை இல்லை எமக்கு சர்வதேச பொறிமுறைகொண்ட விசாரணையே வேண்டும் என காணாமல் போனோரின் உறவுகள் தொடர்ந்தும் வலியுத்தி வரும் நிலையில் இன்று கிளிநொச்சியில் காணாமல் போனோர் அலுவலகத்தின் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இந்த நடமாடுசேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் போனோரின் உறவுகள் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது உறவினர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்ற பொலிசார் முற்பட்டவேளையில் போராட்டக்காரர்களுடன் முறுகல்நிலை ஏற்பட்டது.