SHARE

ஐ.நா.வில் தனித்தனியான நிகழ்ச்சி நிரலுடன் இயங்குவதாக காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி கவலை

பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கதைப்பதற்கு தற்போதைய நிலையில் தமிழ் அமைப்புக்களோ தமிழர் பிரதிநிதிகளோ தயாராக இல்லை. அவர்கள் ஐ.நா.வில் தனித்தனியான நிகழ்ச்சி நிரலுடன் பிரிந்தே இயங்குகிறார்கள் என, வடக்கு-கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா கவலை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தற்போது நடைபெற்றுவரும் 51 ஆவது கூட்டத்தொடரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரதிநிதியாக கலந்துகொண்டுள்ள அவர் ஐ.நா.வில் நமது ஈழநாட்டிற்கு வழங்கிய விசேட நேர்காணலியேயே இவ்வாறு கூறினார்.

மேலும் தற்போதைய ஐ.நா.வின் புதிய பிரேரணையும் உள்ளக விசாரணையையே மேல் சக்தியூட்ட கோரியுள்ளமையானது காணமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை மேலும் இழுத்தடிப்பு செய்வதாகவே அமைந்துவிடுகிறது. தவிர, மேற்குலகம் படுகொலை செய்த இலங்கை அரசிற்கு தொடர்ந்தும் துணைபோகிறதா என்ற சந்தேகத்தினையும் எழுப்புகிறது என அவர் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email