SHARE

ஐ.நா.விலிருந்து கஜேந்திரன் எம்.பி.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை ஐ.நா. முன்றலில் இன்றுவரை பெற்றுக்கொள்ள முடியாமைக்கான தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் சில புலம்பெயர் அமைப்புக்களும் கூட்டாக வழங்குகின்ற உள்ளக விசாரணைத் தீர்மானத்திற்கான ஆதரவே காரணம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சாடியுள்ளார்;.

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள அவர் அங்கு நமது ஈழநாட்டிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு கூறினார்.

மேலும் தமிழ் மக்கள் மீதான நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் யுத்தக்குற்றங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற பொறுப்புக்கூறல் விவகாரத்தை மனித உரிமைகள் பேரவைக்குள் வைத்திருந்து எந்த முன்னேற்றங்களும் ஏற்படப்போவதில்லை. கடந்த 10 வருடங்களாக அது நிருபிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பொறுப்புக்கூறல் விவகாரத்தை மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியே எடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்பதே தமது கோரிக்கையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email