SHARE

சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் எடுக்கக்கூடிய காத்திரமான நடவடிக்கைகள் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) வெளியிட்டுள்ள பட்டியலிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவர்கள் சிறிலங்கா அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் அமர்வில் தெரிவித்திருந்த கருத்துக்குப் பதில்தரும்விதத்திலேயே இலண்டனை மையமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் அமைப்பு இப்பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.

இப்பரிந்துரைகளில், இறுதிப்போரின்போது இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் பட்டியல் வெளியிடுதல், மீண்டும் துயிலுமில்லங்கள் அமைந்திருந்த இடங்களில் கல்லறைகளை நிறுவ அனுமதிப்பதுடன், குடும்பங்களுக்கு மானியங்கள் வழங்குதல், மே-18 இனப்படுகொலை தினத்தை எவ்வித அச்சமுமின்றி அனுசரிக்க அனுமதித்தல், ‘புனர்வாழ்வு’ முகாம்களை உடனடியாக மூடுதல், புலம்பெயர்ந்து வாழும் ஆயிரக்கணக்கானோர் உள்ளிட்ட, புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் இழப்பீடு வழங்கல், வடக்குக் கிழக்கில் பொதுமக்கள் நிருவாகத்தில் இராணுவத்தின் தலையிடுகளை நீக்குவதுடன், அங்கிருந்து இராணுவப் பிரசன்னத்தை அகற்றுதல், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை அவர்களிடம் திருப்பி ஒப்படைத்தல், வடக்குக் கிழக்கில் இந்துக்கோயில்களில் நிலங்கள் மீது புத்தவிகாரைகள் அமைக்கப்படுவதை நிறுத்துவது உள்ளிட்ட பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Tangibles-239Ys-finalAmended-Tamil

Tangibles-239Ys-final

Print Friendly, PDF & Email