SHARE

 யுத்தத்தில் தமது உடல் உறுப்புக்கள் பாதிப்படைந்து, மாற்றுத்திறனாளிகளாக வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்துவரும் முன்னாள் போராளி மற்றும் குடும்பத்தலைவர்களை இழந்த மாவீரர் குடும்பங்களுக்கு நமது ஈழநாடு வாழ்வாதார திட்டத்தின் கீழ் தொடர்ந்து வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. 

அந்த அடிப்படையில் இந்தமாதம் தெரிவு செய்யப்பட்ட 10 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் தலைவரான சரவணன் அவர்கள் நமது ஈழநாடு வாழ்வாதார திட்டத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, லண்டனில் உள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் அவர்களின் ஏற்பாட்டில் இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான நிதி உதவியை மனிதநேய தொண்டரான  மனோச் பிரசன்னா அவர்கள் நன்கொடையாக வழங்கி உதவியிருந்தார்.

இவ்வாறாக, முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உதவிகளை நமது ஈழநாடு அறக்கட்டளை ஊடாக, திரு கீத் குலசேகரம் அவர்கள் தொடர்ந்து செய்து வருவது குறிப்படத்தக்கது.

Print Friendly, PDF & Email