SHARE
image_pdfPRINT

யாழ்.பருத்தித்துறை நகரில் உள்ள தையல் கடை ஒன்றுக்குள் முக மூடிகளுடன் நுழைந்த ரவுடிகள் கடையை அடித்து நொருக்கியதுடன், உடை உரிமையாளரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் கடை உரிமையாளர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு மின்வெட்டு அமுலில் இருந்த சமயம் இடம்பெற்றுள்ளது.  சம்பவத்தில் ச.பாலகுமார் (வயது44) என்பவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி தையல் கடை உரிமையாளருக்கு ரவுடிகளிடமிருந்து தொடர்ச்சியாக அச்சுறுத்தல் வந்ததாகவும், இது தொடர்பாக கடை உரிமையாளர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளார்.