SHARE
செல்வநாதன்
செல்வநாதன் (NEWSREPORTER)

தமிழர் பெருமைகளையும் அவர்களுக்கே உரித்தான தனித்துவமிக்க கலச்சார பண்பாட்டு விழுமியங்களையும் புலம் பெயர் தேசத்திலும் எடுத்தியம்பும் நோக்கில் பித்தானியாவில் தமிழ் கலாசார நாள் நிகழ்வு இடம்பெற்றது.

Waltham Forest Tamil Community யின் ஏற்பாட்டில் Waltham forest Town Hall இல் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் தமிழர் கலாச்சார உடையணிந்து கலந்து கொண்டதுடன் கும்மி, கோலாட்டம், பொய்க்கால் குதிரை, சுளகு நடனம், கரகாட்டம், வில்லிசை, பறை இசை மற்றும் மேலும் பல நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

இதேவேளை குறித்த நிகழ்வில் சிறப்பம்சமாக தமிர்களின் அடையாளங்களை நினைவுபடுத்தும் கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது. தமிழர் தகவல் நடுவம் (TIC) மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம் (CCD) ஆகியவற்றின் வரலாறு மற்றும் பாரம்பரியத்துக்கான (History and Heritage Unit) வினால் நடாத்தப்பட்ட இக்காண்காட்சியில் அதன் செயற்பாட்டாளர்களான மநுமயூரன் கிருபானநத மநுநீதி, விஜய் விவேகானந்தன், விதுரா விவேகானந்தன், விமலதாசன் கனிஷ்டன், தவராசா நிதர்சன், தனகவேலாயுதன் வனுசன் மற்றும் தனபாலசிங்கம் பிரதீபா ஆகியோர் சிறப்புற காட்சிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email