SHARE
image_pdfPRINT

19 ஆம் திகதி வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதேசமயம் அவருக்குக் கீழ் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை இரு நியமனங்களும் செல்லுபடியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் 20 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.