SHARE
image_pdfPRINT

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையினை இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை விமானப்படையினால் இன்று(புதன்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அரசியல் அமைப்புக்கு அமைய, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரமும் தற்போதுள்ள அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமையவும், பாதுகாப்பு அமைச்சின் முழுமையான அனுமதியின் கீழ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.’ எனத் தெரிக்கப்பட்டுள்ளது.