SHARE
image_pdfPRINT

மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோர் நாளை வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் எஸ்.ஆர். ஆட்டிகல உள்ளிட்டோருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த மூவரையும் பிரதிநிதித்துவப்படுத்தி உயர் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள் இதனை நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், குறித்த மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் நாளை இடம்பெறவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.