SHARE

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிடலான 5 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் 4 வது நாளாகிய இன்று (4) மதியபோசன இடைவேளையின் பின் தனது 2 ஆவது இனிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி ஆட்டநாள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்றைய மதிய போசன இடைவேளையின் பின் தன்வசமிருந்த மீதம் இரு விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இந்திய அணி தனது 2 ஆவது இனிங்ஸில் 245 ஓட்டங்களை பெற்றது. 2 ஆவது இனிங்ஸிற்காக இந்திய அணிக்கு புஜாரா (66) மற்றும் ரிஷிப் பன்ட் (57) ஆகியோர் அரைச்சதங்களை பெற்றுக்கொடுத்த போதிலும் ஏனைய வீரர்கள் அதிகபடியாக 23 ஓட்டங்களைக்கூட கடக்காது ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் 378 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடனும் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ள இத்தொடரை சமநிலையில் முடிக்கும் முனைப்புடனும் பதிலுக்கு தனது 2 ஆவது இனிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து, இன்றைய 4 ஆம் நாள் ஆட்;டநேர நிறைவில் 259 ஒட்டங்களை பெற்றுள்ளது. ஜோ ரூட் (76) ஜொனி பிரிஸ்ரோவ் (72) ஆகியோர் அரைச்சதங்களைக்கடந்து களத்தில் உள்ளனர்.

Print Friendly, PDF & Email