SHARE

நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதை விடுத்து தவறான தகவல்களை அரசாங்கம் பரப்பிவருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகளை இலக்கு வைத்து தாக்குவதற்கு முயற்சிப்பதாக தம்மீது அரசாங்கம் குற்றம் சுமத்துவதாக கூறினார்.

இலங்கையில் அரசாங்கத்தின் ஊழல் ஆட்சிக்கு எதிராக ஜே.வி.பி நாடளாவிய ரீதியில் எதிர்ப்புப் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார்.

தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் அரசியல் இயக்கங்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டினார்.

பொதுப் பிரச்சினைகள் பற்றிய அறியாமை மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை முன்னேற்ற இயலாமை போன்றன இதற்கு உதாரணம் என அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற மலிவான தந்திரோபாயங்களுக்கு பொதுமக்கள் பலியாக வேண்டாம் என்றும், அரசுக்கு எதிரான தங்கள் போராட்டங்களை தொடருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Print Friendly, PDF & Email