SHARE

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு கோரிக்கை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் பேதங்களின்றி முன்னெடுப்பதற்கு ஒன்றிணையுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வடக்கு, கிழக்கு பகிரங்கமாக கோரியுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வடக்கு, கிழக்கு விடுத்துள்ள ஊடக அறிக்கையில், தமிழினம் இலங்கை அரசாலும் அதன் நேச நாசகார சக்திகளாலும் திட்டமிட்டு 2009இல் கொன்றொழிக்கப்பட்ட நாளை, மருந்தையும் உணவையும் தடைசெய்து தமிழரைத் தலைவணங்க வைக்க முயன்று தோற்று யுத்த சூனிய வலயங்கள் என்று உத்தியோக பூர்வமாக வலையங்களை அறிவித்து.

நரித்தனமாக மக்களை அவ்வலயங்களுள் ஒன்றுகூட்டி உலகினால் மனித குலத்திற்கு ஒவ்வாததென தவிர்த்தொதுக்கப்பட்ட போர் முறைகளையும் கொடிய இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்தி உலகு மௌனமாய்ப் பார்த்திருக்க எம்மினத்தை கருவறுத்த நாளை, பேதங்கள் அனைத்தையும் தவிர்த்து தமிழர் என்கின்ற நிமிர்வுடன் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் முற்றத்தில்; நினைவேந்த அனைவரையும் அமைப்பு பணிவன்புடன் வேண்டி நிற்கின்றது.

இவ்வருடத்திற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மிகப்பெரும் மக்கள் எழிச்சியுடன் நினைவேந்துவது தொடர்பக திட்டமிடல் ;கூட்டங்கள் எதிர்வரும் நாட்களில் அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் மேற்கொள்ளப்படும்.

இந்நினைவேந்தல் முற்றுமுழுதாக மக்கள் பங்களிப்புடன் நடைபெறும். இதற்கான நிதி சேகரிப்புக்கள் புலம்பெயர் தேசங்களிலோ புலத்திலோ நடைபெற்றது. இது தொடர்பில் விளிப்புணர்வை பேணும் வண்ணம் அனைவரிடமும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் உள்ளது.

Print Friendly, PDF & Email