SHARE
image_pdfPRINT

நாடாளுமன்றத்தினை கலைக்கும் நோக்குடனேயே ஆளும் தரப்பினர் நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வருகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

தற்போது நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை பதவி விலகுமாறு வலியுறுத்தி எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக காண்பித்த இரா.சாணக்கியன் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடப்படுகின்றனர். எனினும் பதவி விலக வேண்டியது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அல்ல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.