SHARE
image_pdfPRINT

காணி உரிமையாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் இன்று புதன்கிழமை எழுவை தீவு பகுதியில் 4 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்காக அளவீடு செய்யப்பட இருக்கிறது.

இலங்கை மக்கள் பொருளாதாரத்தில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், வடகிழக்கில் காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கு காணி உரிமையாளர் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து போராட பொது அமைப்புகள், அரசியல் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.