SHARE
image_pdfPRINT

அத்துருகிரிய பகுதியில் எரிபொருள் கொள்வனவு செய்ய வருகைத் தந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 85 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

வேனொன்றில் வருகைத் தந்து, எரிபொருளை நிரப்புவதற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்த தருணத்தில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக, அவர் அத்துருகிரிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.