SHARE
image_pdfPRINT

சுன்னாகம் – கந்தரோடை பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நோில் சென்று ஆராய்ந்துள்ளார்.

வெளியான தகவல் தொடர்பாக வலி,தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அழைத்துச் சென்று நோில் ஆராய்ந்திருக்கின்றார்.

இது தொடர்பில் அங்கு இருந்த பௌத்த மதகுருவிடம் வினவியிருந்தார். சந்திப்பின் போது அதிகளவான இராணுவத்தினர் பிரசன்னமாகியிருந்ததாக அங்கிருந்தவர்களால் அவதானிக்கப்பட்டது.