SHARE
image_pdfPRINT

சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டுக்கு வந்த ஆயுதம் தாங்கிய குழு அவரை அச்சுறுத்திவிட்டு வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் வெள்ளை வானில் வந்த ஆயுதம் தாங்கிய மூவர் பிலியந்தலையில் உள்ள சமுதிதவின் வீடு அமைந்துள்ள வீட்டுத் தொகுதிக்குள் நுழைந்து பாதுகாப்பு அதிகாரியை நோக்கி துப்பாக்கியைக் காட்டி வீட்டுக்குள் நுழைய முயன்றனர்.

இதனைத் தொடர்ந்து பின்னர் வீட்டின் மீது கற்களை வீசி விட்டும் சரமாரி துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டும் அந்தக் குழு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பிலியந்தலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எரிவாயு கலவை பிரச்சினை, வெள்ளைப்பூண்டு மோசடி உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற பல்வேறு ஊழல், மோசடிகள் தொடர்பான தகவல்களை சமுதித தனது நிகழ்ச்சிகளில் அம்பலப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.