SHARE
image_pdfPRINT

மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்போடை வாவிப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று(புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உப்போடையிலுள்ள பிரபல ஹோட்டலுக்கு அருகாமையிலுள்ள வாவி பகுதியிலிருந்தே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் உப்போடை வாவி பகுதியில் உருக்குலைந்த நிலையில் இருக்கின்ற காரணத்தினால் அடையாளம் காணப்படாத நிலையில் காணப்படுகின்றது.

சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.