SHARE

இந்தியப் பிரதமருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் புதிய வரைவு தயாரிப்பது என்ற இணக்கத்துடன் கொழும்பில் நேற்றுக் கூடிப் பேசிய தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டம் நிறைவடைந்தது. அத்துடன், இந்தப் புதிய வரைவை சரிபார்த்து எதிர்வரும் சனிக் கிழமைக்குள் அந்த ஆவணத்தில் 11 கட்சிகளின் தலைவர்களும் கையொப்பமிடுவது என்றும் இவ்வாறு அனைத்துத் தலைவர்களும் கையொப்பமிட்டதும் திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் மோடிக்கு இந்தியத் தூதரகம் ஊடாக கடித ஆவணத்தை அனுப்பி வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் 13ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துமாறு இந்தியப் பிரதமரை கோரி தமிழ் பேசும் கட்சிகள் சார்பில் கடிதம் ஒன்றை அனுப்புவதற்கான சந்திப்புக்கள் இடம்பெற்றன.

இந்தக் கடி தத்துக்கான வரைவு தயாரிக்கப்பட்ட நிலை யில் அதில் திருத்தங்களை ஏற்படுத்தி கையொப்பமிடுவதற்காக நேற்றைய தினம் கட்சிகளின் தலைவர்கள், பிரதி நிதிகள் கொழும்பு குளோபல் ரவர்ஸ் ஹோட்டலில் ஒன்றுகூடினர். காலை, மாலை என இரு அமர்வு களாக இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், இலங்கை தமிழ் அரசுக் கட்சி நேற்று முன் தினம் செயல்குழு கூட்டத்தில் முடிவு எடுத்தவாறு தனியான வரைவு ஒன்றுடன் பங்கேற்றது.

ஏற்கனவே ரெலோவும் மற் றைய கட்சிகளும் இணைந்து உருவாக்கிய வரைவு 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதையே கோரிக்கையாகக் கொண்டிருந்தது. தமிழ் அரசுக் கட்சியின் வரைவில், கூட்டு உறவு சமஷ்டி கட்டமைப்பை கோரிக்கையாகவும் உச்ச பட்ச அதிகாரப் பரவலாக்கத்தையும் கோரும் விதமான வரைவை சமர்ப்பித்தது.

இந்த விடயங்கள் தொடர்பில் தமிழ் பேசும் கட்சிகள் கூடி ஆராய்ந்தன. இதன் போது கடுமையான வாதப்பிரதிவாதங் கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து வரைவில் தமிழ் அரசுக் கட்சியின் விட யங்களை கோரிக்கொண்டு, தற்காலிக ஏற்பாடாக 13ஆவது திருத்தத்தை அப்படியே நடைமுறைப்படுத்தக் கோரு வதை அடிப்படையாகக் கொண்டு வரை வில் திருத்தம் ஏற்படுத்த உடன்பாடு எட்டப்பட்டது.

மதியம் 1.30 மணியுடன் முதல் அமர்வு முடிவடைந்த நிலையில், புதிய வரைவு தயாரித்து முடிக்கப்பட வில்லை. இதைத் தொடர்ந்து பிற்பகல் 2.45 மணியளவில் இரண்டாவது அமர்வு ஆரம்பமானது. இந்த அமர்வு ஆரம்ப மான பின்னர், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கூட்டத் தைத் தொடர்ந்து நடத்துமாறும், வரைவை இறுதி செய்து அனுப்பிய பின்னர் அவற்றை படித்து திருத்தங்கள் இருந் தால் கூறுவதாகக் கூறி கூட்டத்திலிருந்து வெளியேறினர். தொடர்ந்து காரசாரமாக இடம்பெற்ற கூட்டத்தில் இறுதி வரைவில் இடம்பெற வேண்டிய விடயங்கள் குறித்து இறுதி யில் சுமூகமாக முடிவு எட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாலை 5.45 மணி யளவில் கூட்டம் நிறைவடைந்தது. இந்த சந்திப்பில் எட்டப்பட்ட விட யங்கள் அடங்கிய இறுதி வரைவு எட்டப் பட்டதும். அந்த வரைவு அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அனுப் பப்பட்டு, அவர்கள் படித்து திருத்தங்கள் ஏதும் இருந்தால் அவையும் திருத்தப்பட் டதன் பின்னர் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அந்தக் கடிதத்தில் கையொப்பமிடுவர்.

எதிர்வரும் சனிக் கிழமை மாலைக்குள் அனைத்துக் கட்சி களின் தலைவர்களும் கையொப்பமிடு வது என்று முடிவு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கட் கிழமை இந்திய தூதரகம் ஊடாக இந்தி யப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடி தத்தை அனுப்பி வைப்பது என்று முடிவு எட்டப்பட்டது. இந்த சந்திப்பில் இரா.சம்பந்தன், ஹக்கீம், மாவை சேனாதிராஜா, மனோ கணேசன், அமீர் அலி, சி.வி.விக் னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்தி ரன், சுரேஷ் பிறேமச்சந்திரன், என்.சிறீ காந்தா உட்பட்ட அரசியல் தலைவர்கள் பங்குகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Print Friendly, PDF & Email