SHARE
image_pdfPRINT

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியிலும் கவனயூர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றது.

இறுதி யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி 1711 ஆவது நாளாக உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் மாதம் தோறும் 30 ஆம் திகதி வீதியில் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்த வருகின்றமை குறிப்பிடத்தக்கது.