SHARE
image_pdfPRINT

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என்ற வாசகங்கள் ஸ்கொட்லாந்தின் பாராளுமன்றம், அருங்காட்சியகம் மற்றும் பிரபல சந்தைகள் போன்ற பிரசித்தி வாய்ந்த கட்டடங்களில் நேற்று இரவு காட்சிப்படுத்தப்பட்டது.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்ள சிறிலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரவுள்ள நிலையில் அவரது முகத்துடன் இனப்படுகொலைக்கு நீதி வேண்டுமென்ற வாசங்கள் தமிழ் ஆர்வலர்களால் ஸ்கொட்லாந்தின் பிரசித்தி பெற்ற கட்டடங்களில் ஒளிவிர்க்கப்பட்டுள்ளது.