SHARE
image_pdfPRINT

நமது ஈழநாடு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இம்முறை தமிழர்தாயகத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளான முன்னாள் போராளிகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பகள் என தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

தற்போதைய கொரோனா தொற்று காலநிலையில் அவர்களின் கஷ்ட நிலைக்கு கரம்கொடுக்கும் வகையில் பிரித்தானியாவில் வசிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் அவர்களின் ஏற்பாட்டில் தன்னார்வ கொடையாளி ராகிஷனின் நிதிப்பங்களிப்பில் மேற்படி குடும்பங்களிற்கான அத்தியவசிய உணவும்பொருட்கள் வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு மாற்றுத்திறனாளிகள் மாதர் அமைப்பின் உதவியுடன் தேர்தெடுக்கப்பட்ட குடும்பங்களிற்கு இவ்வுதவித்திட்டம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.