SHARE
image_pdfPRINT

பூநகரி – சங்குப்பிட்டி கடலில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மிதந்துவந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பொதுமக்கள் சிலர் இது குறித்த தகவலை பொலிஸாருக்கு வழங்கியதையடுத்து பூநகரி, சாவகச்சேரி பொலிஸார் மற்றும் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

மீன்பிடி வலைகள் சுற்றிய நிலையில் காணப்படும் குறித்த சடலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.