SHARE
image_pdfPRINT

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவனர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு நினைவு நாள் நினைவேந்தப்பட்டது.

யாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம் பெற்றது.

இதில் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் சதுக்கத்திற்கும் மலர்தூபி அஞ்சலிசெலுத்தப்பட்டது.

நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ் முன்னாள் முதல்வர் ஆனோல்ட், யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரெட்ணம் அடிகளார், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், சிவில் சமுகத்தினர், கட்சி உறுப்பினர்கள் எனப் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.