SHARE
image_pdfPRINT

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடையை நீக்கக்கோரி பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரித்தானிய அரசு விடுதலைப்புலிகள் மீது விதித்திருந்த தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடரப்பட்ட வழக்கில் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறு என விசேட தீர்ப்பாயம் கடந்த ஆண்டு இறுதியில் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதனையடுத்து புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கவேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்றதுடன் புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசுக்கு தொடர் அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளரும் கென்ட் பகுதி ஒருங்கிணைப்பாளருமான கௌசிகன் சசிகுமார் தடையை நீக்ககோரி பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருவதை கீழ் உள்ள படத்தில் காணலாம்.