SHARE

தற்போதைய சூழலில் ஆணைக்குழுவொன்று தேவையற்றதொன்று என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி நியமித்துள்ள புதிய ஆணைக்குழு தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

இவ்வாறான ஆணைக்குழுவினை நியமிப்பதன் மூலம் காலத்தினை கடத்தலாம் என்று அரசாங்கம் எண்ணுகிறது.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியன தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது போன்று காண்பித்து தமிழ் மக்களையும், சர்வதேசத்தினையும் ஏமாற்றிவிடலாம் என்றும் இந்த அரசாங்கம் கருதுகின்றது.

எம்மைப் பொறுத்தவரையில், புதிய விசாரணை ஆணைக்குழுவிற்கு எவ்விதமான பெறுமதியும் இல்லை. அதன் விசாரணைகளும், அறிக்கைகளும் எவ்விதமான பயனையும் தரப்போவதில்லை. அதன் மீது எமக்கு நம்பிக்கையும் இல்லை. எமது மக்களுக்கான பொறுப்புக்கூறல் செய்யப்பட வேண்டும். அதில் எவ்விதமான விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை.

Print Friendly, PDF & Email