SHARE
image_pdfPRINT

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

அனைத்து தமிழ் கட்சிகள் , மாணவர் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புகளால் மேற்படி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடையடைப்பு போராட்டத்திற்கும் வடக்கு கிழக்கு வாழ் மக்களும் வர்த்தகர்களும் தமது பூரண ஆதரவினை வழங்கினர்.

யாழ். நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றது.

தனியார் போக்குவரத்து சேவை இடம்பெறவில்லை மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

அரச பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.