SHARE

எதிர்கால தன்னலம் கருதியே எதிர்கட்சிகள் வரவு – செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதில்லை என தமிழ் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

பட்ஜட்டை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்காமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” இலங்கையினுடைய வரவு செலவு திட்டத்திலே எதிர்க் கட்சிகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது தவிர்த்து வருவதென்பது இன்று நேற்றல்ல இது தொடர்ச்சியாக இடம்பெற்ற வருகின்ற விடயம். வரவு செலவு திட்டத்தை எதிர்த்தால் சலுகைகளை
பெற்றுக்கொள்ள முடியாது போய்விடும் என்பதே இதற்கு காரணமாகின்றது.

மறைமுகமாக அந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையிலேயே நேற்றும் நடந்து கொண்டனர். ஆனால் இவர்கள் நினைத்திருந்தால் தமழ் மக்கள் பற்றி சிங்கள தலைமைகள் இழிவாக பேசுகின்றமை தொடர்பில் கருத்துக்களை
தெரிவித்து திர்த்து வாக்களித்திருக்கலாம். ஆனால் அதனை அதனை அவர்கள் செய்திருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்த்தோ அல்லது ஆதரவாகவோ வாக்களிக்காது விட்டதன் பிரதிபலன்களையும், நன்மைகளையும் அவர்கள் எதிர்காலத்தில் அனுபவிப்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Print Friendly, PDF & Email