SHARE
image_pdfPRINT

புயல் – மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 292 குடும்பங்களை சேர்ந்த 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

இதன்படி, இன்று (03) காலை 9 மணி வரை திரட்டப்பட்ட பள்ளி விபரங்களின் அடிப்படையில் ஒரு வீடு முழுமையாகவும், 93 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன. இதேவேளை 2 பாதுகாப்பு அமைவிடங்களில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 88 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 144 குடும்பங்களைச் சேர்ந்த 397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 05 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முழுையாகவும், 68 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 03 குடும்பங்கள சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.