SHARE

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடை தவறு என பிரித்தானியாவின் விசேட தீர்ப்பாயம் அண்மையில் தெரிவித்துள்ள நிலையில் குறித்த விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை பிரித்தானிய அரசு முற்றுமுழுதாக நீக்கவேண்டும் என்றும் அதற்கான அழுத்தங்களை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் அரசுக்கும் வழங்குமாறு கோரி பிரித்தானியா வாழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரித்தானியாவின் Ilford தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் Wes Streeting எம்.பி. யுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட செயற்பாட்டாளர் குழுவினர் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க அரசுக்கு அழுத்தம் கொடுகக்குமாறு அவரிடம் கோரிக்கைவிடுத்தனர்.

பிரித்தானிய அரசின் கொவிட்-19 விதிமுறைக்குட்பட்டு Zoom ஊடகம் மூலம் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக இழைக்கப்பட்டு வரும் அநீதிகள் தொடர்பில் தான் அறிவேன் என தெரிவித்த எம்.பி. றநள ளவசநநவiபெ குழுவினரின் கோரிக்கையான தடைநீக்கம் தொடர்பில் உள்துறை அமைச்சருடன் கலந்துரையாடி சாதகமான பதிலை விரைவில் பெறற்றுத்தருவதாகவும் பாராளுமன்ற அமர்வின் போது குறித்த விடயத்தை அமுல்படுத்த நீதியின்பால் நிற்பதாகவும் உறுதியளித்தார்.

சிவஞானம் ஜெயந்தனின் ஏற்பாட்டிலும் கபிலன் அன்புரத்தித்தின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமலன் சீவரட்ணம் மற்றும் செயற்பாட்டாளர்களான சிவஞானம் ஜெயந்தன், டினேஸ் நவரத்தினம், வினோதன் காந்தலிங்கம், நாகராஜ் காந்தலிங்கம், இளவரசன் ஜெயபாலன், அரவிந்தராஜ் நல்லதம்பி, பொன்னம்பலம் குணசீலநாதன், மதனகுமார் அழகையா, லட்ஷ்மண் தெய்வேந்திரம், கதாதரன் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரித்தானியா அரசு விடுதலைப்புலிகளை தடைப்பட்டியிலிருந்து நீக்க வேண்டும் என கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் (TGTE) தொடரப்பட்ட வழக்கில் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறு என கடந்த ஜீலை மாதம் விசேட தீர்பாயம் அறிவித்தது.

இதனை நீதிமன்றம் இரு வகையில் அமுல்படுத்தும். அதில் ஒன்று உள்நாட்டு அலுவலகத்தை மீள் பரிசீலனை செய்யும் படி உத்தரவு வழங்கலாம். அல்லது அவர்கள் தடையை எடுக்க வேண்டும் அதற்கான ஒரு ஆணையை பாராளுமன்றில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதி மன்றம் உத்தரவிடலாம். இவ்வாறு இரு வகையான உத்தரவுகளை வழங்கும் உரிமை நீதிமன்றத்திற்கு உள்ளது.

இந்நிலையிலேயே தடையை நேரடியாக நீக்குமாறு உள்நாட்டு திணைக்களத்திற்கும் அழுத்தம் கொடுக்குமாறு அல்லது பாராளுமன்றில் குறித்த விவகாரம் தாக்கல் செய்யப்படுமாயின்; அதில் தமிழ் மக்கள் சார்ப்பாக தடையை நீக்க கோருமாறு குரல் கொடுக்குமாறும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பிக்களை மேற்கொண்டுவரும் தமிழ் செயற்பபாட்டாளர்கள் கோரிக்கைகளை விடுத்துவருகின்றனர்.

Print Friendly, PDF & Email