SHARE

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடை முற்று முழுதாக நீக்கவேண்டும் என்றும் அதற்கான அழுத்தங்களை அரசுக்கும் வழங்குமாறு கோரி பிரித்தானியா வாழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடை தவறு என பிரித்தானியாவின் விசேட தீர்ப்பாயம் அண்மையில் தெரிவித்துள்ள நிலையிலேயே குறித்த தடை நீக்கத்தை அமுல்படுத்த விரைந்து செயல்பட்டுவரும் புலம் பெயர் செயற்பாட்டாளர்கள் தத்தம் பகுதிகளிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரித்தானியாவின் Enfield North தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் குநசலயட Feryal Clark எம்.பி. யுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட செயற்பாட்டாளர் குழுவினர் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க அரசுக்கு அழுத்தம் கொடுகக்குமாறு அவரிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பிரித்தானிய அரசின் கொவிட்-19 விதிமுறைக்குட்பட்டு Zoom ஊடகம் மூலம் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடைதவறு என பிரித்தானிய விசேட தீர்ப்பாயம் தெரிவித்தமையை சுட்டிக்காட்டிய செயற்பாட்டாளர் குழுவினர் அதனை அமுல்படுத்த அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டனர்.

குகச்செல்வம் கோபாலகிருஷ்ணனின் ஏற்பாட்டில் கபிலன் அன்புரத்தித்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமலன் சீவரட்ணம் மற்றும் செயற்பாட்டாளர்களான பிரவின்ரன் யோர்ஜ் கமில்டன், கபிலன் அன்புரத்தினம், சுபதர்ஷா வரதராசா, சுபாமகிஷா வரதராசா, டினோஸ் நவரத்தினம், குகச்செல்வம் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறு என கடந்த ஜீலை மாதம் விசேட தீர்பாயம் அறிவித்தது. இதனை நீதிமன்றம் இரு வகையில் அமுல்படுத்தும். அதில் ஒன்று உள்நாட்டு அலுவலகத்தை மீள் பரிசீலனை செய்யும் படி உத்தரவு வழங்கலாம். அல்லது அவர்கள் தடையை எடுக்க வேண்டும் அதற்கான ஒரு ஆணையை பாராளுமன்றில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதி மன்றம் உத்தரவிடலாம். இவ்வாறு இரு வகையான உத்தரவுகளை வழங்கும் உரிமை நீதிமன்றத்திற்கு உள்ளது.

இந்நிலையிலேயே தடையை நேரடியாக நீக்குமாறு உள்நாட்டு திணைக்களத்திற்கும் அழுத்தம் கொடுக்குமாறு அல்லது பாராளுமன்றில் குறித்த விவகாரம் தாக்கல் செய்யப்படுமாயின்; அதில் தமிழ் மக்கள் சார்ப்பாக தடையை நீக்க கோருமாறு குரல் கொடுக்குமாறும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பிக்களை மேற்கொண்டுவரும் தமிழ் செயற்பபாட்டாளர்கள் கோரிக்கைகளை விடுத்துவருகின்றனர்.

Print Friendly, PDF & Email