SHARE
image_pdfPRINT

மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு யாரிடமும் அனுமதி கோரத்தேவையில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினருமானசிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் 27ஆம் நாள் வழமை போன்று மாவீரர் நாள் நடைபெறும். எமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு நாம் யாரிடமும் அனுமதியும் பெறதேவையில்லை. உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதனை யாரும் தடுக்க முடியாது எனக்கூறியுள்ளார்.

அத்துடன் எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை உடைத்து கொரோனா சூழ்நிலைகளுக்கு ஏற்ப வழபோன்று மாவீரர் நாள் நடைபெறும் என சிவாஜிலிங்கம் மேலும் கருத்ரைத்துள்ளார்.