SHARE
image_pdfPRINT

கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தால், தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனை எதுவுமின்றி விடுதலை செய்யுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே செல்வராசா கஜேந்திரன் இந்த கோரிக்கையை விடுத்தார்.

” சிறைச்சாலைகளுக்குள் சமூக இடைவெளி இல்லை. சுகாதார பாதுகாப்பும் இல்லை. எனவே, தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வைரஸ் தொற்றினால் அவர்கள் கடுமையாக பாதிக்ககூடும். தமிழ் அரசியல் கைதிகளில் பலர் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே, அவர்களை உடன் விடுதலை செய்யுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் பிணையில் செல்வதற்காவது அனுமதியுங்கள்.” – என்றும் கஜேந்திரன் குறிப்பிட்டார்.