SHARE
image_pdfPRINT

நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 24 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்து 183 பேர் குணமடைந்துள்ளனர்.