SHARE

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா ஆபத்து நிலையினை கவனத்தில் கொண்டு தழிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பில் அல்லது நிபந்தனையுடனான பிணையில் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் எதேச்சையாக மேற்கொள்ளப்பட்ட கொரோனோ நோய்த்தொற்று பரிசோதனையில் முதல் நாளில் 7 கைதிகள் தொற்றுக்கு ஆளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மறுநாளே தொற்று எண்ணிக்கை 22 ஆக அதிகரித்தது பெரும் அதிர்ப்தியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே சிறைக்குள் நீண்டகாலமாக பலவீனமுற்றிருக்கும் அரசியல் கைதிகளை இந்த பேராபத்திலிருந்து காப்பாற்றுவதற்கு மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யுமாறு அரசியல் கைதிகளின் உறவினர்கள் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் சார்பில் அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட அமைப்புகளிற்கு மகஜர் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கை மகஜர் பின்வருமாறு ,

the-voice-of-the-voiceless

Print Friendly, PDF & Email