SHARE

” தேர்தலின்போது மக்கள் எனக்கு போதியளவு ஆணை வழங்காததால் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் என்னால் தற்போது கதைக்க முடியவில்லை.” – என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று கிளிநொச்சி பனை – தென்னை அபிவிருத்திச் சங்கத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பையடுத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி பலர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவை அனைத்தும் கோரிக்கைகளாக மட்டுமே உள்ளன. அந்தக் கோரிக்கைகளில் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அரசாங்கம் நீதியான தீர்வினை வழங்கும்.” – என்றும் டக்ளஸ் குறிப்பிட்டார்.

அத்துடன், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீங்கள் அழுத்தம் பிரயோகிப்பீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு,

” அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கதைப்பதற்கு போதியளவு ஆணை தாருங்கள் என மக்களிடம் தேர்தல் காலத்தில் கேட்டிருந்தேன். எனினும், எதிர்ப்பார்த்தளவு ஆதரவு கிடைக்கவில்லை. ஆணை வழங்கியிருந்தால் நிச்சயம் செய்திருப்பேன்.” – என்று பதிலளித்தார் டக்ளஸ்.

Print Friendly, PDF & Email