SHARE

தமிழீழ மண்ணின் விடிவிற்காய் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் மாவீர் நாளிற்கான ஆயத்தப்பணிகளை பிரித்தானியாவிலுள்ள உலகத்தமிழர் வரலாற்று மையம் மேற்கொண்டுள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீர் நினைவுநாளினை பிரித்தானிய அரசின் கொவிட்-19 விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுஷ்டிக்க திட்டங்களை வகுத்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் செயற்பாட்டாளர்கள் அதற்கான பணிகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.

அந்தவகையில் இம்முறை மக்களிற்கு சிறந்த சுகாதரா பாதுகாப்புகளை வழங்கும் வகையில் சிரமதானப்பணிகள் மற்றும் சமூக இடைவெளியை பேணுவதற்கான ஒழுங்குபடுத்தல்கள் போன்ற பணிகளில் செயற்பாட்டாளர்கள் ஈடபட்டுள்ளனர். நினைவுநாளிற்கு வருகைதரும் மக்களிற்கு சிறந்த பாதுகாப்பை இம்முறை வழங்குவதற்கு பிரித்தானியாவில் தற்போது நிலம் கடும் குளிரின் மத்தியிலும் செயற்பாட்டாளர்கள் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளதை அவதானிக்கமுடிகிறது.

Print Friendly, PDF & Email