SHARE
image_pdfPRINT

ஏற்கனவே திட்டமிட்டபடி கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகள் திட்டமிடப்படி நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிக்கை இன்று (07) கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் விடுத்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 11 ஆம் திகதி சுகாதார நடைமுறைகளுக்கு அமைய புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள 2 ஆயிரத்து 936 பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை நடைபெறும்.

அதேபோல, கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையும் எதிர்வரும் 12 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.