SHARE

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்ககூடாதென இலங்கை இராணுவம் அச்சுவேலி பகுதியில் வர்த்தகர்களை அச்சுறுத்தியுள்ளது.

ஒன்றிணைந்த அழைப்பில் இன்று வடக்கு கிழக்கில் முழு அடைப்பு இடம்பெற்று வருவதால் யாழ்ப்பாண நகரமும் முடங்கியுள்ளது. இந்நிலையில் அச்சுவேலி பகுதியில் கடைகளை திறக்குமாறு கடை உரிமையாளர்களுக்கு நேற்று மாலை நேரடியாக படை அதிகாரிகளாலும் புலனாய்வாளர்களாலும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு சென்ற வலிகிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோஸ் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அச்சுவேலி சந்தியில் உள்ள பேரூந்து தரிப்பிடத்துக்கு முன் இராணுவம், மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இராணுவ உயரதிகாரிகள் சொகுசு வாகனங்களில் அப்பகுதியில் பிரசன்னமாயிருந்தனர். சந்தியை சூழவும்  புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

Print Friendly, PDF & Email