31 ஜனவரி 2020 அன்று பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டது. எனவே, பிரித்தானியாவில் வசித்துவரும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் (EU, EEA, Swiss citizens) மற்றும் அவர்களின் ஏனைய நாட்டு குடும்ப அங்கத்தவர்கள் (Non EEA family members) பிரித்தானியாவில் தொடர்ந்து வசிக்கவிரும்பினால், EU Settlement Scheme (EUSS) என்ற புதிய நடைமுறையின் கீழ் பிரித்தானிய வதிவிட விண்ணப்பத்துக்கு, 30 யூன் 2021 இற்கு முன்னதாக விண்ணப்பிக்கவேண்டும்.
இந்த விண்ணப்பத்தனை மேற்கொள்பவர் 31 டிசம்பர் 2020 இல் அல்லது இதற்கு முன்னதாக பிரித்தானியாவில் வசிப்பவராக இருக்கவேண்டும். விதிவிலக்காக, இந்த தினத்துக்குள் பிரித்தானியாவில் இல்லாத ஐரோப்பிய ஒன்றிய குடிமகனின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் இதில் விண்ணப்பிக்கக்கூடியதாக இருக்கும். உதாரணமாக, அந்தத் திகதியில் அல்லது அதற்கு முன்பிருந்தே குடும்பரீதியான உறவு நீடித்திருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கமுடியும்.
பொதுவில், பிரித்தானியாவில் தொடர்ந்தும் வசித்து வேலை செய்யஃகல்வி கற்க விரும்பும் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள்ஃதங்கி வாழ்பவர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.
நிரந்தர வதிவிட அட்டை (Permanent Residence Card) அல்லது வதிவிட அட்டை (Residence Card) அல்லது வேறு மூலத்தை அடிப்படையாகக் கொண்ட வதிவிட அட்டை (Derivative Residence Card) வைத்திருக்கும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளும் கூட இந்தத் திட்டத்தின் கீழ் கண்டிப்பாக விண்ணப்பிக்கவேண்டும்.
Indefinite leave to enter the UK, Indefinite leave to remain in the UK மற்றும் பிரித்தானிய அல்லது ஐரிஸ் குடியுரிமை கொண்டோர் (இரட்டைக் குடியுரிமை உட்பட) இதற்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.
30 யூன் 2021 வரை நீங்கள் தற்போது கொண்டுள்ள அந்தஸ்து மற்றும் உரிமைகள் தொடர்ந்தும் இருக்கும். அதன்பின்னர் தொடர்ந்து வசிப்பதற்கு அல்லது வேலை செய்வதற்கு நீங்கள் இப்புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருக்கவேண்டும். இந்த விண்ணப்பங்களை மேற்கொள்பவர்களுக்கு settled status அல்லது pre-settled status வழங்கப்படும்.
• Pre-Settled status: இதற்குத் தகுதிபெறுவதற்கு கடந்த ஆறுமாதங்களில் ஒரு நாள் பிரித்தானியாவில் வசித்திருந்தால் போதுமானதாகும். இந்த அந்தஸ்து ஐந்து வருட காலத்திற்கு வழங்கப்படுகின்றது. அதன் பின்னர் நீங்கள் நிரந்தர வதிவுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்,
• Settled status: நிரந்தர வதிவுரிமையைப் போன்றது. இதற்கு தொடரான ஐந்து வருடங்களில் ஒருவருடத்திற்கு ஆறு மாதங்கள் என்ற அடிப்படையில் பிரித்தானியாவில் வசித்திருக்கவேண்டும். இது கடைசி ஐந்து வருடங்களாக இருக்கவேண்டும் என்றில்லை. வேறு தொடர்ச்சியான ஐந்து வருட காலப்பகுதியாகவும் இருக்கலாம். ஆனால் அதிலிருந்து தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் பிரித்தானியாவுக்கு வெளியே வசித்தவராக இருக்கமுடியாது. இந்த அந்தஸ்த்துக் கிடைத்து ஒரு வருடத்தின் பின்னர் பிரித்தானியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
Settled மற்றும் Pre-Settled ஆகிய இரண்டு அந்தஸ்துக்களுடனும் நீங்கள்:
• ஐக்கிய இராட்சியத்தில் வேலை செய்யலாம்,
• தற்போது நீங்கள் பயன்படுத்துவதைப்போல NHS இனை இலவசமாகப் பயன்படுத்தலாம்,
• கல்விச் செயற்பாட்டில் இணைந்துகொள்ளலாம் அல்லது தொடர்ந்து கல்வி கற்கலாம்,
• தகுதியுடையோர் நிதிசார் உதவிகள் மற்றும் ஓய்வூதியம் போன்ற அரசாங்க நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்,
• ஐக்கிய இராட்சியத்திற்குள் உள்ளேயும் வெளியேயும் பயணிக்கலாம்.
பிரித்தானியாவில் நிரந்தர வதிவுரிமை (permanent residence) வைத்திருக்கும் ஐரோப்பிய பிரஜைகள்:
உங்களிடம் பிரித்தானியாவின் செல்லுபடியான நிரந்தர வதிவிட ஆவணம் இருந்தால் பின்வருவனவற்றில் எதேனும் ஒன்று இருக்கும்:
• நீல நிற வதிவிட ஆவணத்தினுள்ளே ஒரு சான்றிதழ் (சுவிஸ் நாட்டவராயின் இளஞ்சிவப்பு (pink) நிறத்தில் இருக்;கும்)
• கடவுச்சீட்டின் உள்ளே ஓர் சான்றிதழ்
• நிரந்தர வதிவிட அனுமதியை உறுதிப்படுத்தும் biometric residence card (EU, EEA அல்லது சுவிஸ் நாட்டவர் அல்லாத ஒருவரிடமே இது இருக்கும்)
EU, EEA அல்லது சுவிஸ் நாட்டவர்களின் நிரந்தரவதிவிட ஆவணத்தில் Document Certifying Permanent Residence (நிரந்தர வதிவுரிமையை உறுதிப்படுத்தும் ஆவணம்) என இருக்கும். (உங்களுடைய ஆவணத்தில் registration certificate எனப் பதிவிடப்பட்டிருந்தால் அது நிரந்தர வதிவிட ஆவணம் இல்லை.)
நீங்கள் 30 யூன் 2021 இற்கு பின்னர் பிரித்தானியாவில் தொடர்ந்து வசிக்க விரும்பினால்:
• ஐரோப்பிய ஒன்றிய குடியேற்றத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கவேண்டும் – இதற்கு நீங்கள் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வசித்திருக்கவேண்டும் என்பதை நிருபிக்கவேண்டிய தேவையில்லை. அல்லது
• 30 யூன் 2021 இற்கு முன்னதாக குடியுரிமைக்கு (citizenship) விண்ணப்பிக்கவேண்டும்
பிரித்தானியாவில் காலவரையறையின்றிய உள்நுழைவு அல்லது தங்குவதற்கான அனுமதி (indefinite leave to enter or remain) வைத்திருப்பவர்கள்:
Indefinite leave to enter or remain (ILR) இற்கான விண்ணப்பத்தினை நீங்கள் மேற்கொண்டிருந்தால்:
• உங்கள் கடவுச்சீட்டில் ஓர் முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும் அல்லது உள்விவகார அலுவலகத்தின் கடிதம் இருக்கும்.
• விக்னெட் (vignette) ஸ்ரிக்கர் அல்லது பயோமெற்றிக் வதிவிட அனுமதி (biometric residence permit) கூட இருக்கலாம்
அவ்வாறாயின் இப்புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்காமல் நீங்கள் பிரித்தானியாவில் தொடந்தும் வசிக்கலாம்.
எனினும் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்திசெய்யும் பட்சத்தில் இப்புதிய திட்டத்தின் (EU Settlement Scheme) கீழ் உங்களுக்கு indefinite leave to remain வழங்கப்படும். இது settled status எனப்படும். இதற்கு தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் வசித்திருக்கவேண்டும் என நிருபிக்கத் தேவையில்லை.
புதிய திட்டத்தின் கீழ் settled status இனைப் பெற்றுக்கொண்டால்:
• நீங்கள் உங்களுடைய குடியேற்ற அந்தஸ்தினை இழக்காமல் தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் பிரித்தானியாவுக்கு வெளியே செலவிடக்கூடியதாக இருக்கும் (தற்போதுள்ள indefinite leave to remain இன் கீழ் இரண்டு வருடங்கள் மட்டுமே செலவிடமுடியும்).
• சுவிஸ் நாட்டவர் அல்லது அத்தகையவரின் குடும்ப அங்கத்தவராயின் உங்களுடைய குடியேற்ற அந்தஸ்தினை இழக்காமல் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் வரை பிரித்தானியாவுக்கு வெளியே செலவிடக்கூடியதாக இருக்கும்.
• Settled status இனைக் கொண்டுள்ளவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பிரித்தானியக் குடியுரிமையினைப் பெற்றுக்கொள்வர்.
புதிய திட்டத்தின் கீழ் Pre-Settled இனைப் பெற்றுக்கொண்டால்:
• நீங்கள் உங்களுடைய குடியேற்ற அந்தஸ்தினை இழக்காமல் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் வரை பிரித்தானியாவுக்கு வெளியே செலவிடலாம். settled status இற்கு தகுதி பெற உங்களுடைய தொடர்ச்சியான வதிவினைப் பேணிக்கொள்ளவேண்டும்.
• Pre-settled status இனைக் கொண்டுள்ளவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் அதே Pre-settled status வழங்கப்படும்.
குடும்ப அங்கத்தவர்கள் இணைந்துகொள்ளல்:
உங்களின் நெருங்கிய குடும்ப அங்கத்தவர்கள் 31 டிசம்பர் 2020 இற்கு முன்னதாக இணைந்துகொள்ளலாம். (சுவிஸ் பிரஜையின் கணவன்ஃமனைவி அல்லது குடும்பப் பங்காளி எனின் 31 டிசம்பர் 2025 இற்கு முன்னர் இணைந்துகொள்ளலாம்.) அவர்கள் இங்கு நுரு ளுநவவடநஅநவெ ளுஉhநஅந இன் கீழ் விண்ணப்பிக்கவேண்டும்.
EU பிரஜை எனில் 31 டிசம்பர் 2020 இற்குப் பின்னர் உங்கள் குடும்ப அங்கத்தவரை இங்கு அழைக்கவேண்டுமாயின்:
• 31 டிசம்பர் 2020 இற்கு முன்னர் குடும்ப உறவு ஆரம்பித்திருக்கவேண்டும்
• குடும்ப உறவு தொடர்ந்து பேணியிருக்கவேண்டும்.
சுவிஸ் பிரஜை எனில் 31 டிசம்பர் 2025 வரை கணவன் ஃ மனைவி அல்லது குடும்பப் பங்காளியினை இணைக்கமுடியும்.
• 31 டிசம்பர் 2020 இற்கும் 31 டிசம்பர் 2025 இற்கும் இடையில் குடும்ப உறவு ஆரம்பித்திருக்கவேண்டும்.
• தொடர்ந்து குடும்ப உறவு நீடித்திருக்கவேண்டும்.
இந்த விண்ணப்பத்தினை மேற்கொள்ளத் தேவையான ஆவணங்கள்:
• அடையாள ஆவணம் : கடவுச் சீட்டு, தேசிய அடையாள அட்டை, Biometric residence card or permit.
உங்களுடைய அடையாள ஆவணம் காலாவதியாகியிருந்தால் இந்த விண்ணப்பத்தினை மேற்கொள்ளமுன்னதாக அதனைப் புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.
• Digital photo: விண்ணப்பத்தினை நிரப்பும்போது புகைப்படம் பிடித்துக்கொள்ளமுடியும்
• National Insurance number அல்லது பிரித்தானியாவில் எவ்வளவு காலம் வசித்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்.
• கையடக்க தொலைபேசி எண்
• மின்னஞ்சல் முகவரி
• குழந்தைகளுக்கு அல்லது ஏனைய குடும்ப அங்கத்தவர்களுக்கு விண்ணப்பிப்பதாயின் உறவுமுறையினை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்.
நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் ஒவ்வொன்றிலும் உங்களுடைய பெயரும் திகதியும் இருக்கவேண்டும். நீண்ட காலப்பகுதியினை உள்ளடக்கும் ஆவணங்களைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்ததாக இருக்கும். ஏனெனில் நீங்கள் மொத்தமாக 10 ஆவணங்களை மட்டுமே விண்ணப்பத்தினை பூர்த்திசெய்யும் போது பதிவேற்றம் செய்யமுடியும். மேலதிக ஆவணங்கள் தேவைப்படும் பட்சத்தில் உள்விவகார அலுவலகம் உங்களைத் தொடர்புகொள்ளும்
பிரித்தானியாவில் எவ்வளவு காலம் வசித்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கு National Insurance number இனை வழங்குவது மிகவும் சிறந்ததாக இருக்கும். பிரித்தானியாவில் குறிப்பிட்ட மாதங்களுக்கு வேலை செய்யாமல் இருந்திருந்தால் அல்லது பிரித்தானியாவுக்கு வெளியே வசித்திருந்தால் National Insurance number பதிவேட்டில் இடைவெளிகள் காணப்படலாம். எனவே அந்த இடைவெளிக் காலப்பகுதியினை உள்ளடக்குவதற்கு நீங்கள் ஆதாரங்களை வழங்கவேண்டும். உங்களிடம் நிரந்தர வதிவுரிமைக்கான ஆவணம் அல்லது காலவரையறையின்றி வசித்தல் அல்லது காலவரையறையின்றி உழ்நுழைதலுக்கான அனுமதி (‘Indefinite leave to remain’ or ‘Indefinite leave to enter’) வைத்திருக்கும்பட்சத்தில் பிரித்தானியாவில் எவ்வளவு காலம் வசித்தீர்கள் என்பதை உறுதிப்படுத்தவேண்டிய தேவையில்லை.
‘EU Exit: ID Document Check’ என்னும் யிp இனைப் பயன்படுத்தி ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யலாம். அல்லது தபால் மூலம் அனுப்பலாம்.
குற்றம் இழைத்தவர்கள் அல்லது நீதிமன்ற விசாரணைக்கு காத்திருப்பவர்கள்:
18 வயதிற்கு மேற்பட்ட ஒருவர் பிரித்தானியாவில் அல்லது ஏனைய நாடுகளில் குற்றம் சுமத்தப்பட்டவராக இருந்தால் நீங்கள் இழைத்த குற்றம் தொடர்பான கேள்விகளுக்கு விண்ணப்பத்தில் பதில் வழங்கவேண்டும். நீதிமன்ற விசாரணைக்குக் காத்திருந்தாலும் அந்தக் குற்றம் தொடர்பில் கேள்விகளுக்குப் பதில் வழங்கவேண்டும். உள்விவகார அலுவலகம் பிரித்தானிய மற்றும் சர்வதேச குற்றவியல் பதிவுகளிலிருந்து பரிசோதனை மேற்கொள்ளும். குற்றங்கள் தொடர்பில் பொய்கூறப்பட்டிருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றிய குடியேற்ற திட்ட (EU Settlement Scheme) விண்ணப்பம் இலவசமானது.
மேலதிக தகவல்களுக்கு:
https://www.gov.uk/settled-status-eu-citizens-families Attachments area