SHARE
image_pdfPRINT

இடியன் துவக்கால் தனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை செய்துள்ள சம்பவமொன்று மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மாங்குளம் துணுக்காய் வீதியை சேர்ந்த ரகுநாதன் கௌரிதரன் வயது 37 என்ற இளைஞரே தற்கொலை செய்து கொண்டார்.குறித்த இளைஞர் கால் முறிந்து முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியவர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் இனியன் எனப்படும் ஒருவகை கட்டு துப்பாக்கியினால் தனக்குத்தானே வெடி வைத்து மரணித்துள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.