SHARE
image_pdfPRINT

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 2 ஆம் நாளான இன்று சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 2 ஆம் நாள் அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று இரவு 7 மணிக்கு உயிர்நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, யாழ்.பல்கலை கழகத்தின் மாணவர்கள் உட்செல்லும் வாயிலில் ஒரு மணி நேரமாக காத்திருந்த பொலிசார், பிரதான வாயிலில் மாணவர்கள் சுடரேற்றிய பின்னர் அவ்விடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தியவர்களின் விபரங்களை சேகரித்துடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர்.