SHARE
image_pdfPRINT

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று செவ்வாய்க்கிழமை(10) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக சர்வதேச சமூகத்திடம் நீதிகோரி யாழ். மாவட்டத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் நகரப்பகுதியிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் முன்பதாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இன்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.