இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.
இதேவேளை, தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் ரணில் , நிதியமைச்சர் மங்கள , விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உட்பட்ட அமைச்சர்கள் பதவி விலக முடிவு செய்துள்ளனர்.
அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ சற்றுமுன் அமைச்சுப் பதவியையும் கட்சியில் வகிக்கும் பதவிகளையும் ராஜினாமா செய்தார். ஏனையவர்கள் இன்று மாலை பதவிகளை இராஜினாமா செய்வார்களென தெரிகிறது.
இதேவேளை நாளை (18) காலை சுபநேரத்தில் அனுராதபுரம் ருவன்வெலிசாயவில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய பதவிப்பிரமாணம் செய்வாரென தெரிவிக்கப்படுகிறது.