SHARE

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடுதலையை இலங்கையிடம் சர்வதேசம் வலியுறுத்தக்கோரியும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடிக்க உதவுமாறு கோரியும் பிரித்தானியாவில் நேற்று புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதிப்போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுதலை செய்யுமாறு தாயகத்தில் அவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் நேற்றுடன் ஆயிரமாவது (1000) நாளினை அடைந்துள்ள நிலையில் அப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலத்திற்கு முன்னால் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டு உறவுகளின் விடுதலைக்காக குரல் எழுப்பினர்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடிக்க எங்களுக்கு உதவுங்கள் என்று கோரி பிரித்தானிய பிரமருக்கு ICPPG யினால் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம் தலைமையிலான
கார்த்தீபன் யோகமனோகரன், யோகானந் நவதீசன்,
மஹீஷா வரதராசா, றனிதா தியாகேசு, பிரசாத் சத்தியசீலன், ரமேஷ்கரன் மாணிக்கம் மற்றும் பிரசாத் கதிர்காமநாதன் ஆகிய செயற்பாட்டாளர்களினால் குறித்த மனு பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email