இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் கொத்துக்குண்டுகளின் எச்சங்களையும் மற்றும் காயங்களையும் இன்னும் தமது உடல்களில் சுமப்பர்கள் இருந்துவரும் நிலையில் கொத்துக்குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இல்லை என இலங்கை அரசு துணிச்சலாக அறிக்கை சமர்ப்பித்துள்ளமை ஏமாற்றமளிப்பதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்
‘புதைக்கப்பட்ட காயங்கள்’ எனும் தலைப்பில் இலங்கையில் கொத்துக்குண்டுகளால் பாதிக்கப்ட்டவர்கள் தொடர்பில் ITJP வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “உலகலாவிய ரீதியில் கொத்துக்குண்டு பாவனையினால் பொதுமக்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்வதற்காக 100 உறுப்பினர்கள் உள்ளடங்கியதாக உருவாக்கப்பட்ட கொத்துக்குண்டு தொடர்பான உடன்படிக்கைக்கு இலங்கையே தலைமை வகிக்கின்றது.
அதனடிப்படையில் இலங்கை சமர்ப்பித்திருக்கும் அதன் முதலாவது அறிக்கையில் கொத்துக்குண்டு தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இல்லை என்றும் எனவே உதவிகள் எவையும் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
இது இலங்கைக்கு உள்ளேயும்இ வெளியேயும் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் உட்பட போர்களில் தப்பிய பலரின் வாக்குமூலங்களுக்கு எதிரானதாக உள்ளது.
குறிப்பாக போருக்குப் பின்னர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுவரும் கொத்துக்குண்டு எச்சங்கள் மற்றும் அவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த ஆதாரங்களையும் அரசாங்கம் மறுக்கின்றது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ITJP வெளியிட்டுள்ள அறிக்கை
http://www.itjpsl.com/assets/press/Sri-Lanka-Cluster-Munitions_Tamil.pdf


