SHARE
image_pdfPRINT

தமிழ் மக்களின் முக்கிய ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணி யாழ். முற்றவெளியைச் சென்றடைந்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்தும் இன்று காலை ஆரம்பமான பேரணிகள் தற்போது முற்றவெளியைச் சென்றடைந்துள்ளன.

அலைகடலென திரண்டுள்ள மக்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அத்தோடு எழுக தமிழ் பாடலும் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து  எழுக தமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது.