SHARE
image_pdfPRINT

சர்வதேச யோகா தினம்  இன்று (வெள்ளிக்கிழமை) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்திய துணைத்தூதரகமும், வட. மாகாண கல்வி அமைச்சும் இணைந்து நடத்திய குறித்த சர்வதேச யோகா தின நிகழ்வு யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் நினைவு தினத்தின் தொடர்ச்சியான நிகழ்வாக இந்த சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்துகொண்டார்.

இதன்போது, ஆசிரியர் சூரியகுமாரனால், விருந்தினர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன.