SHARE
image_pdfPRINT

இந்த வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் உளவுத் துறையை மீளக் கட்டமைத்து பரவியுள்ள இஸ்லாமியத் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத்தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.